தற்போதைய செய்திகள்

சில தனியார் பால் பொருட்களில் கலப்படம்: ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

DIN

சென்னை:  சில தனியார் பால் பொருட்களில் கலப்படம் இருப்பது பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்து இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: - 

தனியார் பால் பவுடரில் காஸ்டிக் சோடா கலந்திருப்பதாக பரிசோதனை அறிக்கையில் கிடைத்துள்ளது.  கெட்டுப்போன பாலை காஸ்டிக் சோடா சேர்ந்து பவுடராக்கி விற்கின்றனர். இது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கலப்பட பால் பவுடர் மூலம் தயாரிக்கப்படும் பாலினால் குழந்தைகளுக்கு பல நோய்கள் வரும். ஆவின் பாலில் கலப்படம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது; தாய் பாலுக்கு நிகரானது ஆவின் பால். கலப்பட பாலில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. ஆவின் பால் பொருட்களின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. 

முதல்வரிடம் பால் விவகரம் தொடர்பாக ஏற்கனவே பேசிவிட்டேன். என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை காத்திருந்து பாருங்கள். பிரபல தனியார்  நிறுவனங்கள் கலப்படத்தில்  ஈடுபடுவதை அம்பலப்படுத்தவே சோதனை நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் முழுமையாக வந்தால் மேலும் சில நிறுவனங்கள் சிக்கும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டேன். 

மேலும் அவர் கூறும் போது வைகைச்செல்வம் அழுகிப்போன தக்காளி, குழம்புக்கு ஆகாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இரவு 12 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டுகின்றனர்.  தொலைபேசி மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சப் போவதில்லை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT