தற்போதைய செய்திகள்

இந்திய - சீன எல்லைக்கோடு அருகே பதற்றம்: இரண்டு நாள் பயணமாக சிக்கிம் சென்றார் ராணுவ தளபதி பிபின் ராவத்

DIN

இந்திய ராணுவ தளபதி இன்று காலை சிக்கிம் சென்றார்.  சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லைக்கோடு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கிருந்த இந்திய ராணுவ நிலைகளை சேதப்படுத்தினர்.

மேலும், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணியையும் சீனா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு ஏராளமான இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இந்திய ராணுவம் எல்லை தாண்டி வந்து சாலை பணிகளை தடுத்ததாக சீன ராணுவம் புகார் கூறியது, அதே நேரத்தில், சீன ராணுவம், நமது பதுங்கு குழிகளை அழித்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

இத்தகைய சூழலில், ராணுவ தளபதி பிபின் ராவத் இரண்டு நாள் பயணமாக இன்று சிக்கிம் மாநிலம்சென்றார். சிக்கிம் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT