தற்போதைய செய்திகள்

டிடிவி தினகரன் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

சென்னை:  அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் உள்ளிட்டோர் மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த வாரம்  விசாரணைக்கு வந்த போது, டிடிவி தினகரன் ஆஜராகாமல் இவ்வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப்பின்  வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து நீதித்துறை நடுவர் மலர்மதி, வழக்கின் விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT