தற்போதைய செய்திகள்

தில்லியில் தேர்வு பயத்தால்  9 வயது சிறுமி தற்கொலை முயற்சி

DIN

தில்லியின் பாரத் நகர் பகுதியில், தேர்வு பயண் காரணமாக 9 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸர் கூறினர். இச்சம்பவம் குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

சம்பவம் நிகழ்ந்த கடந்த 21-ஆம் தேதி அந்தச் சிறுமி மற்றும் அவரது 10 வயது சகோதரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, தான் உடை மாற்ற வேண்டும் எனக் கூறிய அந்தச் சிறுமி சகோதரனை வெளியேற்றிவிட்டு ஓர் அறைக்குள் சென்று தாளிட்டுள்ளார்.

பின்னர் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நேரம் அவர் வெளியில் வராததை அடுத்து, அவரது சகோதரன் சத்தம் எழுப்பி அண்டை வீட்டாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அண்டை வீட்டார் கதவைத் திறந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை தற்போது மேம்பட்டு வருகிறது. அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் தெரிய வேண்டியுள்ள நிலையில், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக அவர் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸôர் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT