உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மதுரை ஆதீனம்
மதுரை ஆதீன மடத்தின் 289வது ஆதீனமாக உள்ள அருணகிரிநாதருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
மதுரை: மதுரை ஆதீன மடத்தின் 289வது ஆதீனமாக உள்ள அருணகிரிநாதருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.