தற்போதைய செய்திகள்

ஓபிஎஸ் கருத்து விஷமத்தனமானது: அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

DIN

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தலுக்கும் முன்னதாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கருத்துக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியது விஷமத்தனமானது என்றார்.

மேலும், ஜெயலலிதா முதலவராக இருந்த போது அறிவித்த நல திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்பதில் தற்போதைய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் அரசாகவே இந்த அரசு இருப்பதாகவும், இது தொடர வேண்டும் என்று அனைத்து அதிமுக தொண்டர்களும் விரும்புவதாக கூறிய அவர், 2 சதவீதம் பேரை கொண்ட ஓபிஎஸ் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரசு விமர்சிக்கப்படுகிறது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தெரிவிப்பது போன்று தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

யார் எத்தனை முறை கூறினாலும் முறைப்படி ஆட்சி காலத்தை தற்போதைய அரசு நிறைவு செய்து வரும் 2021-ஆம் ஆண்டு தான் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத் தேர்தல் வரும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், ஓபிஎஸ் பேச்சு ஒருபக்கம் இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என்றார் ஜெயக்குமார்.

திருமணமாகும் ஏழை பெண்களுக்கு ’தாலிக்கு தங்கம்’ உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT