தற்போதைய செய்திகள்

வடலூர் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவர் வெட்டிக் கொலை

வடலூரில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

வடலூரில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44). இவர் பண்ருட்டி சாலையில் உணவகமும், நெய்வேலி சாலையில் மதுபானக் கூடமும் நடத்தி வந்தார். அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டாஸ்மார்க் கடை மூடப்பட்டது.

நெய்வேலி சாலையில் மதுப்பானக் கூடம் அருகே கள்ளத்தனமாக மதுப்பானம் விற்று வந்தார். அப்போது மாமூல் கேட்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இதைதொடர்ந்து, நேற்று 11 மணியளவில் மதுப்பாட்டில் விற்கும் போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை சூழ்ந்து சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்த்ததாக தெரிய வந்துள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரவிச்சந்திரனுக்கு சிவகாமசுந்தரி என்ற மனைவியும் ஜெயசூரியா, ஜெய ஆகாஷ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். வடலூர் போலீசார் பிரேதத்தை பறிமுதல் செய்து குறிச்சிபாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொளையாளியை வடலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT