தற்போதைய செய்திகள்

வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் நூற்பாலை கழிவுநீர்: விவசாயிகள் புகார்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் திருட்டுத்தனமாகக் குழாய் அமைத்து நூற்பாலையிலிருந்து

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் திருட்டுத்தனமாகக் குழாய் அமைத்து நூற்பாலையிலிருந்து கழிவுநீர் விடப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளக்கோவில் காங்கயம் சாலையிலுள்ள வெள்ளமடை வழியாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது அணையிலிருந்து பாசன வாய்க்கால்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளமடையிலிருந்து பிரிந்து செல்லும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு கிளை வாய்க்கால் மூலம் வெள்ளமடை, மொட்டகாடு, பனங்காடு, வேலகவுண்டன்பாளையம், இரட்டைக்கிணறு பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 இந்தக் கிளை வாய்க்காலையொட்டி வெள்ளமடையில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. நூற்பாலை குடியிருப்புகளில் பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். 

இந்தக் குடியிருப்புகளின் சாக்கடை நீர் மற்றும் நூற்பாலையின் கழிவுநீர் சட்ட விரோதமாகக் குழாய்கள் அமைத்து வாய்க்காலில் விடப்படுகிறது. இதனால் மாசடைந்த வாய்க்கால் நீரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து விவசாயிகள் ராமசாமி, வடக்கத்தியார் சதாசிவம் ஆகியோர் கூறியதாவது: நூற்பாலையிலிருந்து திருட்டுத்தனமாக கழிவுநீர் வாய்க்காலில் விடப்படுகிறது. இதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

வெள்ளக்கோவில் பி.ஏ.பி.வாய்க்கால் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டும் உடனடி நடவடிக்கை கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT