தற்போதைய செய்திகள்

நகரங்களின் வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடைய வேண்டும்: பிரதமர் மோடி

DIN

புதுதில்லி:  நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுதில்லியில்  சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஸ்முக்கின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, சமூகநல தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் 115–வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்.. 

நம் நாட்டின் கிராமங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சாதி பாகுபாடு தான். இது தான் வி‌ஷமாக பரவி கிராமங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை களைந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியை மேம்பாடு அடைய செய்வது தற்போது மிகவும் அவசியம் ஆகும்.

கிராம முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகரங்களில் ஏற்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் கிராமப்புற பகுதிகளையும் சென்றடைய வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT