தற்போதைய செய்திகள்

தாஜ்மஹால் ஒரு இந்துக் கோயில்: பாஜக எம்பி வினய் கட்டியார் சர்ச்சை கருத்து

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஒரு இந்துக்கோவில் என்று பாஜக எம்பி வினய் கட்டியார் கூறியுள்ளார்.

DIN

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஒரு இந்துக்கோவில் என்று பாஜக எம்பி வினய் கட்டியார் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச அரசு அண்மையில் சுற்றுலா இடங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதில், தாஜ்மஹால் இடம்பெறவில்லை. இதனால், அந்த மாநில அரசுக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சன அலைகள் எழுந்தன. மத, சமய சிந்தனையுடன் தாஜ்மஹாலை அணுகக் கூடாது என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தாஜ்மஹால் ஒரு இந்துக் கோயில். இப்போது அது இருக்கும் இடத்தில், ஒரு சிவன் கோயில் இருந்தது. என்று பாஜக எம்பி வினய் கட்டியார் சர்ச்சைக்க்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது  இந்துக் கடவுள்களின் சிலைகள், இருந்ததற்கான பல குறியீடுகள் தாஜ்மஹாலில் இருக்கின்றன. அதற்கு, 'தேஜோ மஹால்' என்று பெயர் இருந்தது. 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹாலுக்குச் சென்று அதில் இருக்கும் இந்துக் குறியீடுகளைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும் அது, வெறும் கல்லறை என்றால், அதில் எதற்கு அத்தனை அறைகள் கட்டப்பட்டுள்ளன. எந்தக் கட்டிடத்தையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் பெயரை தேஜோ மஹால் என்று மாற்றினால் போதும்  என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT