தற்போதைய செய்திகள்

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது.

DIN

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது.

இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர்(காங்.), ஜவாஹிருல்லா (ம.ம.க.), க.வீரமணி(தி.க), காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ. முரசொலி பவள விழாவில் மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.

ஆனால், பலத்த மழை பெய்ததால் பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் இன்று நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவாரூா்: 50 பேருக்கு திருமண நிதியுதவி

‘சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது’

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

SCROLL FOR NEXT