தற்போதைய செய்திகள்

ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கட்கிழமை சென்னை வருகிறார்:  தமிழக அரசு வழக்கறிஞர் தகவல்

DIN

சென்னை:  ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கட்கிழமை சென்னை வர உள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.,9) திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்து கெடு விதித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார்.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கட்கிழமை(செப்., 18) சென்னை வர உள்ளதாக தமிழகஅரசின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT