தற்போதைய செய்திகள்

பெற்றோர்களை கவனித்துக் கொள்ளவில்லை எனில் ஊதியத்தில் இருந்து 10% பிடித்தம்: அஸ்ஸாம் மாநிலத்தில் புதிய சட்ட மசோதா

DIN

பெற்றோர்களை கவனித்துக் கொள்ளவில்லை எனில் அவர்களின் ஊதியத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் தங்களது பெற்றோர்களையும், உடன் பிறந்த மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வேலை செய்யும் பிள்ளைகளின் ஊதியத்தில் இருந்து 10% ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

இதற்கான சட்டமசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

இதுகுறித்து அம்மாநில அமைச்சர் பிஸ்வா சர்மா கூறுகையில், "வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் தற்போது பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை கவனிப்பது இல்லை. அவர்களை பராமரிக்க முடியாது என முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.

எனவே முதியோர் இல்லங்களும் அதிகமாகி வருகின்றன. எனவே முதல் முறையாக அசாம் அரசு இவ்வாறான ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. பிள்ளைகள் பெற்றோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT