தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டு சாதனை

DIN

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 151 புள்ளிகள் உயர்ந்து  32,424 புள்ளிகளாக இருந்தன.

அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 10,153 புள்ளிகளாக இருந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகளவில் டாலரின் மதிப்பை விட மற்ற நாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை அதிகரித்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.08-ஆக வர்த்தகமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT