தற்போதைய செய்திகள்

நல்லிணக்க நடவடிக்கையாக தென்கொரியாவில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளின் செயல்பாடு நிறுத்தம்

DIN

வடகொரியா வீரர்களை குறைக்கூறும் செய்திகள், இசை, மற்றும் பிரச்சார தகவல்களை எல்லையில் உள்ள மிகப்பெரிய ஒலிப்பெருக்கிகள் மூலம் தென்கொரியா ஒலிபரப்பி வந்தது. வடகொரியாவும் அதேபாணியில் தென்கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும். இது இரு நாட்டு ராணுவத்தினர்  இடையே வழக்கமாக நடந்து வருகிறது.

தற்போது இரு கொரிய நாடுகள் இடையே சமாதான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் ஏப்ரல் 27ம் தேதி இரு கொரிய அதிபர்களும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அதை தொடர்ந்து நல்லிணக்க நடவடிக்கையாக தென்கொரியாவில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளின் செயல்பாடு இன்று நிறுத்தப்பட்டது. எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே உள்ள பதற்றத்தை போக்கி அமைதியான சூழ்நிலையை உருவாக்க அந்த ஒலிப்பெருக்கிகள் அணைக்கப்பட்டன என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT