தற்போதைய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில்மோதியதில் 11 மாணவர்கள் உயிரிழப்பு: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நிவாரண நிதி அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் டிவைன் மிஷன் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுடன் பள்ளிப்பேருந்து ஒன்று

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் டிவைன் மிஷன் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுடன் பள்ளிப்பேருந்து ஒன்று பள்ளிக்கு இன்று காலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஹ்பூர்வா பகுதி அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும்போது, எதிர்ப்பாராத விதமாக பேருந்து மீது ரயில் (எண் 55075 )மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 11 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். இந்த விபத்து 

குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் என் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்குத் தலா ரூ. 2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தோருக்குத் தலா ரூ. 50,000 உதவித் தொகையை ரயில்வே அமைச்சகம் அளிக்கும் என்று அமைச்சர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?- இபிஎஸ்

மீண்டும் பீக்கி பிளைண்டர்ஸ்! புதிய இணையத் தொடர் துவக்கம்!

விஜய்யிடம் கேளுங்க! நாங்க என்ன தவெகவின் Marketing officer-ஆ? - Annamalai

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு| செய்திகள்: சில வரிகளில் | 3.10.25

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

SCROLL FOR NEXT