தற்போதைய செய்திகள்

சீனாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

DIN

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு சீனா சென்றார். அங்குள்ள வூஹான் நகரில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை இன்று சந்தித்துப் பேசுகிறார். 

சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு வரும் ஜூன் மாதம் ஷாங்காய் நகரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியா-சீனா இடையேயான இரு தரப்பு விவகாரங்கள் முதல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் வரை பல்வேறு விஷயங்களில் ஷீ ஜின்பிங்கும், நானும், எங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம்'' என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு மோடியும், ஷீ ஜின்பிங்கும் முயற்சி செய்வார்கள் என்று சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் கோங் சுவான்யூ கூறினார்.

சிக்கிம் எல்லையில் உள்ள டோக்கா லாம் அருகே, சீன ராணுவம் கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ராணுவம் அங்கு முகாமிட்டது. இதனால், 72 நாள்கள் போர்ப்பதற்றம் நீடித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் விதமாகவும், நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாகவும் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறுவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT