தற்போதைய செய்திகள்

திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பு கிடங்கில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பு கிடங்கில் சனிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வடமேற்கு மூலையின் அருகே லட்டு தயார் செய்யும் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

அங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பூந்தி தயாரித்து கொண்டிருந்தபோது,  சமையலறை எண் 2-இல் திடீரென புகை செல்லும் குழாயில் படிந்திருந்த நெய் திட்டுகளில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. புகைபோக்கி வழியாக, மற்ற மண்டபங்களுக்கும் தீ பரவியது.

இதையடுத்து கோயில் ஊழியர்கள், காவல்துறையினர் தீயை அணைக்க போராடினர். உடனடியாக திருமலையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். சமையலறையில் இருந்த நெய், அனைத்து உணவுப் பொருட்கள், தானியங்கள் எரிந்தது வீணாகி விட்டன. எனினும், எந்தவொரு சேதாரங்கள் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.  

விபத்து காரணமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்திற்குப் பின்னர் தேவஸ்தான அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு அவசரக் கூட்டம் நடத்தியுள்ளார். சமையலறையில் பூந்தி தயாரிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்க ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவா் பரிந்துரை இல்லாத மருந்துகளை உட்கொள்ளாதீா்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

இணையவழி சூதாட்டத்துக்கு எதிரான மனு முக்கியமானது: உச்சநீதிமன்றம்

ஏழுமலையான் லட்டு பிரசாதம் விலையுயா்வு பொய்யான தகவல்

திருவொற்றியூரில் குப்பைகளை அகற்றுவதில் தனியாா் நிறுவனம் மெத்தனம்

தடைகளைத் தாண்டி முன்னேறும் இந்தியா - பிரதமா் மோடி

SCROLL FOR NEXT