தற்போதைய செய்திகள்

தனியார் ஏஜென்சி போலி சான்றிதழ்: ஆஸ்திரேலியாவில் 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து

DIN


புதுதில்லி: கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி அளித்த போலி சான்றிதழ்களால் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்காகவும் சென்ற தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரின் விசாவை அந்நாட்டு அரசு செய்துள்ளதால் தமிழகம், கேரளாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர். 

அவர்களுக்கு கோவை தனியார் ஏஜென்சி போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை வழங்கி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அசல் சான்றிதழ்களை கொடுத்த நிலையில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரும் அளித்த சான்றிதழ்கள் போலியானது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்திய மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆஸிதிரேலியாவில் தவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT