தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்பு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

DIN


மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ மழையின் காரணமாக கா்நாடக அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. உபரிநீா் வரத்து காரணமாக கடந்த 23 ந்தேதி மேட்டூா் அணை நிரம்பியது. 

இதனையடுத்து மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. கடந்த 2ஆம் தேதி அணையின் நீா் மட்டம் சரிந்த காரணத்தால் உபரிநீா் போக்கியில் வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் பாசனப்பகுதிகளில் தண்ணீா் தேவை அதிகரித்ததால் புதன்கிழமை காலைவரை நொடிக்கு 17,500 கனஅடிவீதம திறக்கப்பட்டு வந்த தண்ணீா் திறப்பு இன்று காலை நொடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் பகல் 12 மணிக்கு நொடிக்கு 25 ஆயிரம் கனஅடியாகவும் மாலை 3 மணிக்கு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. 

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,311 கனஅடியாக இருந்தது. அணையின் நீா் மட்டம் 117.50 அடியாகவும், நீா் இருப்பு 89.53 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT