தற்போதைய செய்திகள்

வைகை அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN


மதுரை: வைகை அணையில் நொடிக்கு 3,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 5 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 71 அடி நீர் மட்டம் கொண்டதாகும். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நொடிக்கு 3 ஆயிரத்து 695 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து நொடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை முதல் அணையில் இருந்து நொடிக்கு 3,100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாசன வசதிக்காக நாளை முதல் 120 நாட்களுக்கு வகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதை அடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கரையோர பகுதி மக்களுக்கு 3-ஆம் கடேட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT