ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் வனத்துறை அதிகாரி சுட்டுகொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே வனத்துறை அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் வசித்து வரும் வனத்துறை அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். உடலில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்த வனத்துறை அதிகாரி தாரிக் அகமத் மாலிக் (38) என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டது. வனத்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் முதல்கட்ட விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி யூசுஃப் தார் காண்ட்ரூ இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.
Advertisement
கடந்த சில நாட்களாக ஜம்முவில் பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்திருந்த பயாஸ் அகமது ஷா என்னும் போலீஸ் அதிகாரி பயங்கரவாத இயக்கத்தின் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.