தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச்சு

DIN

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மாலத்தீவு, ஆப்கான், வடகொரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் நரேந்தி மோடியும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பும் வியாழக்கிழமை (பிப்,8) தொலைபேசியில் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை தொடர்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர். 

மாலத்தீவில் ஜனநாயக ரீதியான நடைமுறைகள் பாதுகாக்கப்படவும் நீதித்துறையின் அதிகாரம் நிலைநிறுத்தப்படவும் இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஆப்கான் பாதுகாப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செலுத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

வடகொரியாவில் அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்யவும் இந்த பேச்சுவார்த்தையின் போது மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார். 

பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்த உள்ள பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு முழு குடியுரிமை இல்லாத நிலையில், தீவிரவாதம் தலைதூக்கியது. அரசு அலுவலகங்கள், அதிகாரிகள், பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து ரோஹிங்கியா தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நிகழ்த்தி வருகின்ற நிலையில், அவர்களின் அகதிகளின் நிலைப்பாடு  குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாலஸ்தீனப் பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT