ராமேசுவரம்: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.
ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். கமல்ஹாசனை அப்துல் கலாமின் பேரன் சலீம் நடிகர் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கலாமின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார்.
பின்னர் கலாம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வழியில் கலாம் படித்த பள்ளியின் முன்பு நின்று பார்த்துவிட்டு, கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது: எனது உயிரினும் மேலான மீனவர்களை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் ஒன்று மீன்பிடித் தொழில். அப்படிப்பட்ட தொழிலை தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.
மேலும் மீனவர்களின் பிரச்னையை பற்றி பேசும்போது, வேறு முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்றவில்லை என கமல் குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.