தற்போதைய செய்திகள்

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை

DIN

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி பங்கேற்றார். இறுதி போட்டியில் 13.649 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளார்.

உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் அருணா ரெட்டி. தங்க பதக்கத்தை சுலோவேனியாவின் டிஜாசா வும், வெள்ளி பதக்கத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த  எமிலி பெற்றனர்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் இறுதி போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகர், நூலிழையில் பதக்க வாய்ப்பை நழுவவிட்டார். தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அருணா ரெட்டி முதல் முறையாக உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து "உலகக் கோப்பையில் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை அருணா எனவும், அவரைப் பற்றி நினைக்கையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா-வின் செயலாளர் ஷந்திகுமார் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT