தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பாழடைந்த கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை பாழடைந்த கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை பாழடைந்த கிணற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேலகவுண்டன்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சுமதி என்பவருடைய மகள் பிரியா (20). கல்லூரி இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் வீட்டில் இருந்து வந்தார். திருமணம் ஆகாதவர்.

இவருடைய தந்தை நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். தாய் சுமதி கூலி வேலைக்குச் சென்று விட்டு, மாலை 3 மணியளவில் வந்த போது மகள் சுமதி வீட்டில் இருந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த பிரியா வீட்டுக்கருகிலுள்ள காடையூரான்வலசார் பழனிசாமி என்பவருடைய தோட்டத்துக் கிணற்றுக்கு ஆவேசமாக ஓடியுள்ளார்.

பின்னாலேயே சென்ற அவருடைய தாய் மற்றும் சிலர் எதுவும் செய்து விடாதே எனக் கூற கூற பிரியா கிணற்றுக்குள் குதித்து விட்டார். சுற்றிலும் முட்புதர்கள் வளர்ந்து, குப்பை கூளங்கள் கிடந்த கிணற்றில் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. 

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பாதாள சூரி உதவியுடன் சேற்றில் சிக்கிக் கிடந்த பிரியாவை பிணமாக மீட்டனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT