தற்போதைய செய்திகள்

நீதிபதிகள் போர்க்கொடி: சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

DIN

புதுதில்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. 

வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்து வருகிறார்.

இதனிடையே மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திடீர் அழைப்பு விடுத்துள்ளார். 

சக நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தலைமை நீதிபதி அட்டார்னி ஜென்ரலுக்கு அழைப்பு விடுத்திருப்பது எதற்காக என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தலைமை நீதிபதி செய்தியாளர்களை சந்திகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT