தற்போதைய செய்திகள்

கர்நாடக அரசு சொகுசு பஸ் குளத்தில் விழுந்து விபத்து: 8 பேர் பரிதாப பலி 

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு வால்வோ சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

DIN

ஹாசன்: கர்நாடக மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு வால்வோ சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்பட் 8 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட அரசின் ஓஅ01 ஊ8513 பதிவு எண் கொண்ட வோல்வோ சொகுசு பேருந்து 43 பயணிகளுடன் தர்மசாலாவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. 

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து ஹாசன் நகரின் அருகே சென்றுக்கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைக்கு அருகே இருந்த குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

காயமடைந்த 37 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

SCROLL FOR NEXT