தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

DIN

வேதாரண்யம்:  வேதாரண்யம் அருகே மூதாதையருக்கு தர்ப்பணம்செய்ய கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி தை அமாவாசையான இன்று வேதாரண்யத்தில் இன்று அதிகாலை கடலில் புனித நீராடி முதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், மூதாதையருக்கு தர்ப்பணம்கொடுப்பதற்காக கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

நீரில்மூழ்கி பிரேம், மீட்கப்பட்ட பரத், யோகராஜ் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 

நடுக்கடலுக்கு பைபர் படகில் குளிக்கச் சென்ற 12 இளைஞர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT