தற்போதைய செய்திகள்

குஜராத் அருகே எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் திடீரென தீ: 26 பேர் பத்திரமாக மீட்பு

DIN

கான்ட்லா: குஜராத் கடல்பகுதியில் எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடலோர காவல் படையினர் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

எம்.டி. ஜென்னேசா என்ற கப்பல் 30 ஆயிரம் டன் எண்ணெய்ப் பொருட்களுடன் குஜராத் மாநிலம் தீனதயாள் துறைமுகத்திலிருந்து சுமார் 15 கடல்மைல்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு வெடித்தது.

தகவல் அறிந்து மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட கடலோர காவல்படையினர், கப்பலில் இருந்த குழுவினர் 26 பேரையும் பத்திரமாக மீட்டனர். 

ஆளில்லாத விமானங்கள் மூலம் தீயை அணைப்பதற்காக தண்ணீர் இறைக்கப்பட்டது. கடலில் எண்ணெய்க் கொட்டியதா என்பதை குறித்து விளக்கமளிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT