புதுதில்லி: ஜம்மு நோக்கி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் நேற்றிரவு திடீர் தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தலைநகர் தில்லியில் இருந்து நேற்று இரவு ராஜ்தானி விரைவு ரயில் ஜம்மு-தாவி நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சப்சி மண்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, ரயிலின் பெட்டியின் பி-10 கோச்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். உடனடியாக கவனிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திடீர் தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.