தற்போதைய செய்திகள்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் விமானம் மோதி விபத்து

குஜராத்தின் ஜாம்நகரில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகி

DIN

ஜாம்நகர்: குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் தரையிறங்கும் போது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜாம்நகரில் இருந்து வழக்கமான பயிற்சி பணிக்காக சென்ற விமானம் தரையிறங்க தரையிறங்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானி அதிர்ஷ்டவசமாக வெளியே குதித்து உயிர்தப்பினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்று ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் பரேஜா என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை ஓட்டிய மூத்த அதிகாரி சஞ்சய் சௌஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT