தற்போதைய செய்திகள்

ராகுல்காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ANI

 
புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தியின் 48-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் தோரணங்கள், கொடிகள் கட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ராகுல் காந்தியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT