தற்போதைய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

DIN

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான போர்கால அடிப்படையிலான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, தில்லியில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பைத் தெரிவிக்கும் கடிதம் தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதனால் மூன்று ஆண்டுகளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

தோப்பூரில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையுடன் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும். 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் வசதிகள் செய்யப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு தமிழக அரசால் அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற நான்காவது சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான போர்கால அடிப்படையிலான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன என்றார்.

எய்ம்ஸ் வரைவு அறிக்கை தயாரானவுடன் மத்திய அரசு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். மத்திய அரசுடன் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை நிறைவடைந்த பின்னர் பணிகள் தொடங்கும் என விஜயபாஸ்கர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT