தற்போதைய செய்திகள்

காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது: ஐ.நாவில் சந்தீப் குமார் பேச்சு

ஜம்மு காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது என்று ஐநாவில் பேசிய இந்திய பிரதிநிதி சந்தீப் குமார்

ANI

நியூயார்க்: ஜம்மு காஷ்மீரை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது என்று ஐநாவில் பேசிய இந்திய பிரதிநிதி சந்தீப் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை, போர்க்குற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஐநாவில் சந்தீப் குமார் பேசினார். அப்போது, இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் இடைவிடாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. அதனை அபகரிக்க எண்ணும் பாகிஸ்தான் எண்ணம் ஈடேறாது.

ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் வெற்று வார்த்தை ஜாலம் காட்டி கொண்டிருப்பதாகவும், அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உண்மையை இது ஒரு போதும் மாற்றிவிடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

காஷ்மீர் மீதான உரிமை குறித்து ஐநாவின் பொது விவாதத்தில் பதிலளிப்பதற்கான சரியான தருணத்திற்காக இந்தியா உள்ளது என்று சந்தீப் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT