தற்போதைய செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் : முதல்வர் பழனிசாமி

DIN

சென்னை-சேலம் 8 வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மேலும் இன்று அவர் சேலம் விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசும் போது, சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது. 8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும். வாகனங்கள் பெருகிவிட்டதால் 8 வழிச்சாலை அவசியம், நவீன தொழில் நுட்பத்துடன் சாலை அமைக்கப்பட உள்ளது.  
8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடியதாக சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் இருக்கும். நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும், பயிருக்கான இழப்பீடு, மாற்று நிலம் மற்றும் பசுமை வீடு கட்டி தரப்படும் என்று தெரிவித்தார். 

மேலும் அரசுக்கு நல்ல பெயர் உள்ளதால் மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த சிலர் முயற்சி  செய்கின்றனர் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT