தற்போதைய செய்திகள்

மகளிர் உரிமை குறித்து பேசும் மோடி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்வராதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

DIN

சென்னை: மகளிர் முன்னேற்றம், உரிமை குறித்து உலகமெல்லாம் பேசி வரும் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டினார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கவுள்ள நிலையில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர உலகம் சுற்றும் வாலிபனாக இருப்பதாகவும், செல்லும் நாடுகளில் எல்லாம் மகளிர் முன்னேற்றம், உரிமை குறித்து பேசி வருகிறார். 

ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT