தற்போதைய செய்திகள்

படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்: ரஜினி அறிவுரை

DIN

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் 

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். 

எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது.  எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி. எம்ஜிஆரை நான் முதன்முதலாக பார்த்தபோது சூரியன் போல இருப்பவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன் என்று கூறினார். 

மேலும் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.  மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம்.

மாணவர்கள் தங்கள் நண்பர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஓட்டுப் போடுவதோடு உங்கள் அரசியல் பணி நிற்கட்டும் படிப்பு மிகவும் முக்கியம். என்று ரஜினி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT