தற்போதைய செய்திகள்

அடுத்த மாதம் சீனா செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

DIN

சீனாவில் வரும் ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடக்க உள்ளது. 

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். முன்னதாக அவர் மார்ச் 28-ம் தேதி ஜப்பான் செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்ல உள்ளார். 

டோக்லாம் விவகாரம் தொடர்பாக சுஷ்மாசுவராஜ் கடந்த ஆண்டு நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் எல்லையில் சீன ராணுவம் பின்வாங்கியது, எனினும் குறிப்பிட்ட பகுதி இந்தியாவின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT