தற்போதைய செய்திகள்

பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும்: கே.சி.பழனிசாமி கேள்வி

DIN

சென்னை:  அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். 

முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அவரை  அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளனர்.  இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக பேசியது எப்படி அதிமுக கொள்கைக்கு எதிராக பேசியதாக கருத முடியும். கட்சி கொள்கைக்கு எதிராக அமைச்சர்கள் பேசும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் கே.சி. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT