தற்போதைய செய்திகள்

பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல: நமது அம்மா நாளிதழில் அதிமுக விளக்கம்

DIN

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம் என நமது அம்மா நாளிதழில் அதிமுக சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில், இது பற்றி விளக்கம் அளிக்கும் வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பாஜக அரசை வீழ்த்துவது நோக்கமல்ல. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நோக்கம். பிறர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் நமக்கென்ன பயன்? நமக்கென்ன பயன் என ஆராய்ந்து பார்க்காமல் முடிவெடுக்கும் நிலையில் அதிமுக அரசு இல்லை. பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் அது அதிமுகவால் முடியும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும், 1999-இல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, வீட்டுக்கு அனுப்பியதே அதிமுக தான் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT