தற்போதைய செய்திகள்

போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு

DIN

திருவெறும்பூரில் உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே அண்மையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா உஷா தம்பதியை ஹெல்மட் அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார். இதில் இருச்சக்கர வாகனத்துடன் கீழே தம்பதியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் உஷா சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உஷா உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் உஷா உயிரிழந்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. காமராஜுவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT