தற்போதைய செய்திகள்

சென்னையில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

DIN

சென்னை: சென்னையில் தனியார் விடுதி உட்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதி மற்றும் அதன் உரிமையாளர் வீடுகள், அலுவலகம் உள்பட நான்கு இடங்களில் வருமான வரிதுறைத்துறை அதிகாரிகள் விடிய விடிய நடத்தி வரும் அதிரடி சோதனையில், ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ரூ.500 கோடிக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் ரூ.300 கோடிக்கு ஆவணங்கள் எங்கு உள்ளது என்பது தொடர்பாகவும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, சோதனை நடைபெறும் இடங்களின் உரிமையாளர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தேரா வெங்கடாசாமி தெருவில் உள்ள இல்லத்தில் சோதனை வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டு இருக்கும் போது வீட்டில் இருந்த சுபீர் அலி என்ற நபர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து லாவகமாக தப்பிச் சென்றார். 

இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வருமான வரித்துறை உயர் அதிகாரி சமந்தா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரிஏய்ப்பு புகாரின் பேரிலே வருமானவரி துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT