இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிக காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு(68) திடீரென் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவருக்கு மேல் சுவாசக் குழாய் பகுதியில் சிறு வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிப்படுவதற்கு முன்பு, பல ஊழல் வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நேதன்யாகுவிடம் சுமார் 4½ மணி நேரங்களுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டது. அவரது மனைவி சாரா மற்றும் மகனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.