தற்போதைய செய்திகள்

கியூபா விமானம் கீழே விழுந்து விபத்து - 100 பயணிகள் உயிரிழப்பு

DIN

கியூபா அரசுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 104 பயணிகளுடன் கியூபாவிலிருந்து ஹோல்கைன் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் உயரே எழும்பிய சில நிமிடங்களில் விமான நிலையத்துக்கு அருகே உள்ள பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த விமான விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு மத்திய கியூபாவில் நடந்த விமான விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT