குமாரசாமி பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்பார் என அறிவிப்பு
கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்பே பாஜக முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்பே பாஜக முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் வாஜுபாய் வாலா, பெரும்பான்மை கொண்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சி அமைக்குமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எச்.டி.குமாரசாமி நாளை மறுநாள் புதன்கிழமை மாலை முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா முதல்வர்கள் உட்பட அனைத்துப் பிராந்திய முதல்வர்களையும் அழைத்துள்ளார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தேவெகவுடா தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement