தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

காவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறும் போது, காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு என அவர் தெரிவித்தார். 

மேலும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும் என அவர் கூறினார். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயாராக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

அதன் பின்னர் பேசிய அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே கருத்துவேறுபாடு இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே சிண்டு முடிய வேண்டாம் என்றும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT