தற்போதைய செய்திகள்

கத்ராவில் காட்டுத் தீயையணைக்க இந்திய விமானப் படை முயற்சி

DIN

கத்ராவில் பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் எம்.எல்.எச். ரக ஹெலிகாப்டர்களை  மூங்கில் பக்கெட்களுடன் இந்திய விமானப் படை ஈடுபடுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் திரிகுடா ஹில்ஸ் கத்ரா மாவட்டத்தின் திரிகுடா மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ ஆக்ரோஷமாக கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிகிறது. இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மூங்கில் பக்கெட் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

டேரிங் டிராகன்ஸ் மற்றும் ஸ்நோ லெபர்ட்ஸ் பிரிவுகளில் இருந்து தலா ஒன்று என இரு ஹெலிகாப்டர்கள் இன்று காலை முதல் தனது தீயணைப்பு பணிகளைத் தொடங்கின. ரீசி நீர்தேக்கத்தில் இருந்து நீரை நிரப்பிக்கொண்ட இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 2500 லிட்டர் நீரை கொண்டு செல்ல முடியும். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். 40 டிகிரி வரையில் கோடை வெப்பம் தகிக்கும் நிலையில், கத்ரா வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவி்த்து வருகின்றனர்.

இந்நிலையில் காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் தீ மளமளவென பரவுகிறது. காட்டுத்தீ ஏற்பட்டுள்ள இந்த வனப்பகுதி, வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் வழியாகும். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேராமல் இருக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவ தேவி கோவிலுக்கான புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரேசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT