தற்போதைய செய்திகள்

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்

DIN

வரும் 2019- ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதறகான நடவடிக்கைகளை பகுஜன் சமாஜ்வாதி கட்சி எடுத்து வருகிறது. மாயாவதி நாட்டின் தலித் சமூகத்தின் மிக முக்கியமான தலைவராக உள்ளார். 

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வரும் நாடாளுமனற தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.  மேலும் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலத் தேர்தல்களிலும் பின்தங்கிய மக்களை பிஎஸ்எஸ் கைப்பற்ற முயற்சித்து வருகிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோருடன் மற்ற தலைவர்களுடனும் அவர் இணக்கமாக பேசிவருகிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. மாயாவதி பிரதமர் வேட்பாளர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறார்.

இதற்கிடையில் பி.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பி.எஸ்.எஸ் தலைவர், அனைத்து தரப்பிலும் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது, இன்று கொண்டாடப்படும் மோடி அரசாங்கத்தின் நான்காம் ஆண்டு நிறைவில் உச்சத்தில் இருக்கும் எரிபொருளின் விலையை உதாரணமாக சொல்லலாம். எல்லாவற்றையும் வரலாற்று ரீதியாக சொல்லும் மோடி ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT