தற்போதைய செய்திகள்

சமயபுரம் திருக்கோயில் நடை திறப்பு

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் யானை மசினிக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட மிரட்சி காரணமாக தன்னை வளர்த்த பாகன் பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது. 

சமயபுரம் கோயில் யானை மிரண்டு பாகனைக் கொன்ற தகவல் அறிந்து, சமயபுரம் கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) பொன்.ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் கோயிலுக்குள் விரைந்து சென்றனர்.  மேலும், திருவானைக்கா, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோயில்களிலிருந்து யானைப் பாகன்களும் சமயபுரம் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும், கால்நடைப் பராமரிப்புத் துறை, வனத்துறை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள் சமயபுரம் கோயிலுக்கு விரைந்து வந்து, யானை மசினியை சாந்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று காலை 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை புனிதநீர் தெளிக்கப்பட்டு, பரிகார பூஜைகள் செய்த பிறகு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT